வானூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்த கோரிக்கை

வானூர்,  ஜூன் 26: வானூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கேரிபேக்  உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை  விதித்துள்ளது. மேலும் தற்போது பயன்படுத்துபவர்கள், விற்பனையாளர்கள்,  தயாரிப்பாளர்கள் என பிளாஸ்டிக் பொருட்களை கையாள்பவர்களுக்கு அபராதம்  விதிக்கப்படுகிறது.ஆனால் வானூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில்  பெரும்பாலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி  வருகின்றனர். குறிப்பாக உணவகங்கள் மற்றும் மளிகைக்கடைகளில் அதிக அளவில்  பிளாஸ்டிக் பயன்பாடு நிறுத்தப்படாமல் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக  ஆய்வு செய்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும்  என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: