பூலாம்பட்டியில் ₹25 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

இடைப்பாடி, ஜூன் 19: பூலாம்பட்டி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நேற்று ₹25 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் இடைப்பாடி  அடுத்த பூலாம்பட்டியில், திருச்செங்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம், நாமக்கல் மாவட்டத்தை  சேர்ந்த விவசாயிகள் 1000 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இந்த பருத்தியை கொள்முதல் செய்ய சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் பிடி ரகம் பருத்தி குவிண்டால் ₹4,800 முதல் ₹5,409வரையும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 1000 மூட்டை பருத்தி ₹25 லட்சத்துக்கு ஏலம் போனது.

Advertising
Advertising

Related Stories: