உளுந்தூர்பேட்டை அருகே கோயில் இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதை தடுக்க வேண்டும்

விழுப்புரம்,  ஜூன் 18: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி   வரதராஜபெருமாள் கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆட்சியர்  சுப்ரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:புகைப்பட்டி வரதராஜ பெருமாள் கோயிலுக்குச்சொந்தமான  இடத்தில் ஒரு பகுதியில் மாரியம்மன் ஆலயமும், அரசுக்கு சொந்தமான பால்வாடி  கட்டிடமும் அமைந்துள்ளது. திருவிழா காலங்களில் ஊர் பொதுமக்களிடம் வரிவசூல்  செய்து கோயில் திருவிழாவை நடத்தி வருகிறோம். பல  ஆண்டுகாலமாக பொதுமக்கள் துணையோடும், ஆதரவோடும் இந்த ஆலயத்திற்கு திருவிழா  நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயிலுக்குச்சொந்தமான இடத்தில்  எங்கள் ஊரைச் சேர்ந்த சிலர் வீடுகட்டுவதற்கு பில்லர்போட்டு பணிகளை  தொடங்கியுள்ளனர். ஊர் பொதுமக்கள் இதனை அறிந்து தட்டிகேட்டபோது அவர்கள்  திட்டி கொலைமிரட்டல் விடுக்கின்றனர். இது குறித்து எலவனாசூர்கோட்டை  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். இந்துசமய அறநிலையத்துறை,  தாசில்தாரிடம் மனு அளித்தும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல்  உள்ளனர். எனவே ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து கோயில்இடத்தை ஆக்கிரமித்து  வீடு கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: