பாப்பாக்குடி 18: பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ இலந்தைகுளம் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப் பள்ளியில் கூடுதல் ஆசிரியர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கிராமத்தில் உள்ள இப்பள்ளியில் 74 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 3 ஆசிரியர்கள் பணியிடம் உள்ள இப்பள்ளியில் ஏற்கனவே பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் கடந்த ஆண்டு பதவு உயர்வு பெற்று வேறு பள்ளிக்குச்சென்று விட்டார். இதனால் கடந்த ஒரு ஆண்டாக இப்பள்ளியில் இரு ஆசிரியர்கள் மட்டுமே அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் கற்றுக் கொடுக்கின்றனர்.