ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு

சீர்காழி, ஜூன் 14: தமிழக அரசின் புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும். விலையில்லா பாடப் புத்தகங்களை உடனே வழங்க வேண்டும். பள்ளிகளில் கட்டிட வசதி, கழிவறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்எப்ஐ மாவட்ட இணை செயலாளர் கபிலன்(24), வட்ட செயலாளர் தில்லைராஜன் (22), மாவட்ட செயலாளர் அபிகாஷ் (18) ஆகிய மூன்று பேர் மீது சீர்காழி காவல் நிலையத்தில் அனுமதியின்றி மாணவர்களை ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.இதேபோல் வைத்தீஸ்வரன்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி முன் நீட் தேர்வு ரத்து, பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருதல் ஆகியவற்றைற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் மீது வைத்தீஸ்வரன்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: