தீ விபத்து நிவாரணம் வழங்கல்

திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 12: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்தலவாடி கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமானது. இதுபற்றி தகவல் அறிந்த தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய இயக்குனர் பாக்கியராஜ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, வேட்டி, சேலை மற்றும் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது தீர்த்தமலை, வெங்கடேசன், பரசுராமன், மும்மூர்த்தி, குமரகுரு, ஆனந்தன், தேவநாதன், அன்பு, இளங்கோ, ஞானமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: