வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை

சென்னை, ஜூன் 4: சிந்தாதிரிப்பேட்டை குருவப்பா தெருவை சேர்ந்தவர் சங்கர் (43). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மங்கையர்க்கரசி. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சங்கர் வழக்கமாக நேற்று காலை அலுவலகத்துக்கும், 2 குழந்தைகளும் பள்ளிக்கும் சென்று விட்டனர்.பின்னர் காலை 10 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு, மங்கயர்க்கரசி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்று தனது குழந்தைகளை அழைத்து கொண்டு 11.45 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 30 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: