கழிவுகளை நீர் ஓடைகளில் கொட்டி தீ வைக்கும் பனியன் நிறுவனங்கள்

திருப்பூர், மே 30: திருப்பூர் மாநகராட்சியில் குடியிருப்பு பகுதிகள் நிறைந்துள்ள நீர் வழி ஓடைகளில் பின்னலாடை நிறுவனங்கள் வேஸ்ட் துணிகளை கொட்டி தீ வைத்துச்செல்வதால் கரும்புகை பரவி பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல ஆயிரக்கணக்கான சிறு, குறு பின்னலாடை நிறுவனங்களில் 7 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு, பகல்  என நேரம் பார்க்காமல் வேலை செய்கின்றனர். பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளர்கள் துணிகளை வெட்டி தைக்கும் போது உதிரி துணிகள் அதிகளவு கழிவுகளாக வெளியேறுகிறது. கோடிக்கணக்கான பீஸ்கள் தைக்கும் போது கழிவுகள் அதே அளவு வெளியேறுகிறது. இவற்றை பிளாஸ்டிக் சாக்கில் போட்டு கட்டி வைக்கின்றனர். அதிகளவு சேர்ந்தவுடன் தங்களுடைய வாகனங்களில் ஏற்றி கொண்டுவந்து இரவு நேரங்களில் பொது மக்கள் நடமாட்டம்  இல்லாதபோது  நீர்  ஓடைகளுக்குள்  வீசி தீ வைக்கின்றனர்.

இதனால் புகை அதிகளவு வெளியேறி அப்பகுதி பொது மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவகிறது.  சிறு, குறு பின்னலாடை நிறுவனங்கள் பின்னலாடை கழிவுகளை சேகரித்து மாநகராட்சி குப்பை லாரியில் கொட்டவேண்டும். இதனால் சுகாதாரத்தை காக்க முடியும். பின்னலாடை கழிவுகளை ரோட்டில் கொட்டி தீ வைப்பதால் பொது மக்களுக்கு மூச்சுதிணறல் ஏற்படுவதோடு சுகாதாரசீர்கேடு நிலவுகிறது. ஒரு சில இடங்களில் நீர் வழி ஓடைகள், சாக்கடைகளில் அடைத்துக்கொள்கிறது.

இதனால் சாக்கடை கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடுகிறது.  இதை தவிர்க்க  கழிவுகளை மாநகராட்சி குப்பை லாரிகளில் கொட்ட பி்ன்னலாடை நிறுவனங்கள் முயற்சிக்கவேண்டும். வேஸ்ட் துணிகளை சாக்கடை,நீர் வழி ஓடைகளில் கொட்டும் நிறுவனங்களுக்கு நிரந்தரமாக மின் இணைப்பை துண்டிக்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: