விவாகரத்து கேட்டும் விலகாத சண்டை ஓடும் ரயிலில் ஏலக்காய் மூடைகளை திருடிய வடமாநில கொள்ளையன் 8 ஆண்டுக்கு பின் சிக்கினான்

திண்டுக்கல், மே 28: திண்டுக்கல்லில் ஓடும் ரயிலில் ஏலக்காய் மூட்டைகளை திருடிய வழக்கில் தேடப்பட்ட வடமாநில கொள்ளையர் 8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியுள்ளார். தமிழகம், கேரளாவில் இருந்து வடமாநிலங்களுக்கு ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்காக ஏலக்காய் மூடைகள் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. பின்னர் இங்கிருந்து ரயில்கள் மூலம் ஏலக்காய் மூடைகள் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதன்படி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, திண்டுக்கல்லில் இருந்து வடமாநிலத்துக்கு ரயிலில் ஏலக்காய் மூடைகள் கொண்டு செல்லப்பட்டன. அப்போது ஓடும் ரயிலில் இருந்து 2 ஏலக்காய் மூடைகள் திருடு போனது. அதன் மதிப்பு ரூ.2.லட்சத்து 15 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த 9 பேர் ஏலக்காய் மூடைகளை திருடியது தெரியவந்தது.

தொடர்ந்து வாரணாசி மொகல்ஸ்ராய் பகுதியை சேர்ந்த நவுசாத், பிண்டு, அசோக்சவுக்கான் உட்பட 8 பேரை கைது செய்தனர். ஆனால் முக்கியமான கொள்ளையர் முகம்மது ஆசிப் (44) தலைமறைவாகி விட்டார். பல்வேறு முயற்சிகள் எடுத்தும் கைது செய்ய முடியவில்லை. இதனால் முகம்மது ஆசீப் மீதான  வழக்கை தனியாக பிரித்து திண்டுக்கல் கோர்ட்டில் விசாரணை நடந்தது. அதில் கைதான 8 பேருக்கு சிறை தண்டணை

விதிக்கப்பட்டது.

இதற்கிடையே 8 ஆண்டுகளாக சிக்காத முகம்மது ஆசிப் நடவடிக்கைகளை , திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரகசியமாக கண்காணித்தனர். இந்நிலையில் கடந்த சில  நாட்களுக்கு முன்பு முகம்மது ஆசிப் சொந்த ஊருக்கு வந்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு  இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் தலைமையிலான தனிப்படையினர் வாரணாசிக்கு விரைந்தனர்.

அங்கு பல நாட்களாக முகாமிட்டு தேடினர். அப்போது மற்றொரு கொள்ளை வழக்கில் வாரணாசி போலீசாரிடம் முகம்மது ஆசிப் சிக்கினார் இதனால் அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல்லில் ஏலக்காய் மூடைகளை திருடிய வழக்கில் முகம்மது ஆசிப்பை கைது செய்வதற்கு கோர்ட் உத்தரவை ரயில்வே பாதுகாப்பு படையினர் பெற்றுள்ளனர். இதன்மூலம் ஒரு சில நாட்களில் முகம்மது ஆசிப்பை கைது செய்து, திண்டுக்கல்லுக்கு கொண்டு வர உள்ளனர். அப்போது காவலில் எடுத்து விசாரிக்கவும் ரயில்வே பாதுகாப்பு டையினர் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: