×

மக்களவை தேர்தலில் அமோக வெற்றி கூட்டணி கட்சியினர் நவாஸ்கனிக்கு வாழ்த்து

ராமநாதபுரம், மே 25: ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் அமோக வெற்றிபெற்ற திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனிக்கு கூட்டணி கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மக்களவை தொகுதி திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி 1,27,122 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். நவாஸ்கனி மொத்தம் 4,69,943 வாக்குகளும், பாஜ.வின் நயினார் நாகேந்திரன் 3,42,821,  அமமுக ஆனந்த் 1,41,806, நாம் தமிழர் கட்சி புவவேஸ்வரி 46,385, மக்கள் நீதி மய்யம் விஜய பாஸ்கர் 14,925 வாக்குகளும்  பெற்றனர். நேற்று அதிகாலையில் நவாஸ்கனிக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான வீரராகவராவ் வழங்கினார். வெற்றி பெற்ற நவாஸ்கனிக்கு ராமநாதபுரம் திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொருளாளரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளருமான ஷாஜகான், மாவட்ட தலைவர் வர்சை முகமது, மாவட்ட செயலாளர் முகமது பைசல் மற்றும் கூட்டணி கட்சியினர் நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா கூறுகையில், மனித நேயத்திற்கும் மத வாதத்திற்கும் நடைபெற்ற தேர்தலில் மக்கள் மனித நேயத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். கடுமையாக பாடுபட்டதன் பலனாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. மதவாதத்தை தூண்டும் விதமாக பிரச்சாரம் செய்தனர். ஆனால் மக்கள் அதற்கு செவி மடுக்காமல் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்றார்.

Tags : Nawazaki ,election ,Lok Sabha ,
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...