×

அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை

ராமநாதபுரம், மே 23:  ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளுக்கு காலையிலும், மழலையர், தொடக்கப் பள்ளிகளுக்கு பிற்பகலிலும் நடந்தது. ஆய்வு கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  அய்யண்ணன் பேசுகையில், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் உள்ளன. மே 31ம் தேதிக்குள் பள்ளிக்கான அங்கீகாரத்தை நேரடியாகவோ, ஆன்லைனிலோ புதுப்பிக்க பள்ளி முதல்வர்கள் தாளாளர்களிடம் அறிவுறுத்த வேண்டும். மே 31ம் தேதிக்கு பிறகு அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாயக் கல்வி திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது.

பள்ளி வாகனங்கள் ஆய்வின் போது டிரைவருடன் வாகனத்தில் செல்லும் உதவியாளரையும் உடன் அனுப்பி வைக்கவேண்டும். பள்ளி வாகனங்களில் மாணவர்களை அழைத்து செல்லும் இரு வேளைகளிலும் உதவியாளர்கள் உடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்த காலங்களில் உதவியாளர்கள் செல்லாத நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான நடந்த ஆய்வு கூட்டத்தில் 78 மெட்ரிக் பள்ளிகளிலிருந்து பங்கேற்றனர். தனியார் பள்ளிகளுக்கான ஆய்வு கூட்டங்களில் பெரும்பாலான பள்ளி முதல்வர்கள் கலந்து கொள்வதில்லை என கூறப்படுகிறது. பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் துறை சம்பந்தமாக ஆய்வு, சிறப்பு பயிற்சி போன்ற கூட்டங்களில் தனியார் பள்ளிகள் சார்பில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களே கலந்து கொள்கின்றனர். இனிவரும் காலங்களில் இதுமுறைபடுத்தப்படும்’’ என்றார்.

Tags : schools ,
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்