×

குண்டாற்று கரையில் ஆபத்தான மின் கம்பம்

கமுதி, மே 23:  கமுதியில் குண்டாற்று கரையில் சேதமடைந்து மோசமான நிலையில் மின் கம்பம் உள்ளது. கமுதியில் குண்டாறு சிறிய ஷட்டர் பகுதியில் ஆற்றங்கரையின் மீது மிகவும் மோசமான நிலையில் மின் கம்பம் உள்ளது. இதில் இருந்து கமுதி-கோட்டை மேட்டிற்கு மின்சப்ளை செல்கிறது. இதன் அருகே மயானம் உள்ளது. எந்த நேரத் திலும் ஒடிந்து விழும் நிலையில் உள்ளதால் பேராபத்தை எதிர்நோக்கி உள்ளது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டுமென்றும் கமுதி ஆர்.சி. சர்ச் எதிரே உள்ள மின் கம்பம், காளியம்மன் கோவில் அருகே உள்ள மின் கம்பம் மற்றும் கமுதியின் ஏராளமான தெருக்களில் இதுபோன்று மோசமான நிலையில் மின் கம்பங்கள் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டுமென்று மின் வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : shovel shore ,
× RELATED பயன்பாட்டிற்கு வருமா? குண்டாற்று கரையில் ஆபத்தான மின் கம்பம்