×

சுட்டெரிக்கும் வெயிலால் உச்சத்தை தொட்ட இளநீர் விலை

பரமக்குடி, மே 23:  பரமக்குடியில் சுட்டெரிக்கும் வெயிலால் இளநீர் விலை உயர்ந்துள்ளது. ஒரு இளநீர் ரூ.50 முதல் 70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் வெயில் கடுமையாக உள்ளது. பரமக்குடியில் கடந்த ஒரு வாரமாக வெயில் 100 டிகிரியை எட்டியுள்ளது. இதற்கிடையே ஒரு வாரமாக விட்டு விட்டு பரமக்குடி மற்றும் சுற்றுபுறங்களில் லேசான மழை பெய்தது வருகிறது. நேற்றும் வெயின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்ச்சியான உணவு பொருள்களை தேடி செல்கின்றனர்.

பரமக்குடி நகர் பகுதியில் பல இடங்களில், தற்காலிகமாக இளநீர் கடை, தர்பூசணி, பழ ஜூஸ் கடைகள், கூழ் கடைகளின் விற்பனை களை கட்டியுள்ளது. பகல் வேளையில் வெளியிடங்களுக்கு வாகனங்களில் செல்லும் மக்கள். அங்காங்கே நின்று குளிர்ச்சியான உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இந்த வகையில் பெள்ளாச்சி பகுதியில் இருந்து வரும் இளநீர் அதிகமாக பொதுமக்கள் விரும்புவதால், இதன் விலை தற்போது உயர்ந்துள்ளது.

கடந்த காலங்களில் ரூ.30 முதல் 40 வரை விற்பனை செய்யப்பட்ட இளநீர், தற்போது ரூ.50 முதல் 70 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிகளவு தண்ணீர் மற்றும் பதமாக இருப்பதாக சொல்லி விற்பனை செய்கின்றனர். இதுபோல், உள்ளூரில் இளநீர் ஒன்று ரூ.40 முதல் 50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வியாபாரி கூறுகையில், கோடைகாலங்களில் இளநீர் விலை எப்போதும் அதிகமாகதான் இருக்கும். இந்த முறை இளநீர் காய் வரத்து குறைந்துள்ளதால், விற்பனைக்கு இளநீர் கிடைக்கவில்லை. மொத்த விற்பனையாளர்கள் விலையை உயர்த்தி விட்டனர். இதனால் பெள்ளாச்சி இளநீரை ரூ.40 முதல் 50 வரை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. இந்த மாதம் முழுவதும் விலை கூடுதலாகவே இருக்கும் என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை