இளம்பெண் திடீர் மாயம்

கள்ளக்குறிச்சி, மே 21: தியாகதுருகம் அடுத்த தென்னேரிகுப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகள் காயத்ரி (22). இவர் பிகாம் பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் விடுமுறைக்கு தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

கடந்த 28ம்தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த காயத்ரியை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை வெங்கடேசன் தியாகதுருகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடிவருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: