தலைமை தபால் அலுவலகத்தில் போதிய ஊழியர்கள் இல்லாதால் மக்கள் அவதி

உளுந்தூர்பேட்டை, மே 21: உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் மிளகுமாரியம்மன் கோயில் தெருவில் உள்ளது தலைமை தபால் அலுவலகம். இந்த தபால் அலுவலகத்திற்கு உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பணம் சேமிப்பு மற்றும் பதிவு தபால் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த தலைமை தபால் அலுவலகத்தில் 5க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் தற்போது இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். இதனால் தபால் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களது பணிகளை விரைந்து முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

Advertising
Advertising

 இது மட்டுமின்றி பல பணிகள் விரைந்து முடிக்க முடியாமல் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி கோட்ட தலைமை தபால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உளுந்தூர்பேட்டை தலைமை தபால் அலுவலகத்திற்கு போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: