கொழுந்துமாமலை கோயிலில் நாளை வைகாசி விசாக விழா

வீரவநல்லூர், மே 17: சேரன்மகாதேவி கொழுந்துமாமலை முருகன் கோயிலில் நாளை வைகாசி விசாக விழா நடைபெறவுள்ளது. சேரன்மகாதேவி - களக்காடு மெயின்ரோட்டில் கொழுந்துமாமலை அடிவாரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலானது சேரன்மகாதேவியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும்.

Advertising
Advertising

தமிழ் மாதம் கடைசி வெள்ளிக்கிழமைதோறும் இங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வர். இதுபோல் வைகாசி விசாக விழா மற்றும் திருக்கார்த்திகை விழா இக்கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றாகும். இவ்விரு நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவர்.

இந்த ஆண்டிற்காண வைகாசி விசாக விழா மற்றும் வருஷாபிஷேக விழா நாளை (18ம் தேதி) நடைபெறவுள்ளது. இதையொட்டி பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறவுள்ளது. பக்தர்களின் வசதிக்காக சேரன்மகாதேவி பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

Related Stories: