கடையை சூறையாடியவர் மீது நடவடிக்கை

விழுப்புரம்,  மே 15:  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பெருங்கலாம்பூண்டி  கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. கூலி தொழிலாளி.  நேற்று மனைவி பிள்ளைகளுடன் வந்து எஸ்பியிடம் அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது:எனது உறவினருக்கு சொந்தமான நிலத்தில்  கடந்த 20 நாட்களுக்கு முன்பு ரூ.80 ஆயிரம் செலவில் கடை கட்டி பிரியாணி மற்றும் சூப் கடை நடத்தி வந்தேன். முன்விரோதம் காரணமாக சிலர்  ஜேசிபி மூலம் கடையை இடித்து தரைமட்டமாக்கி அங்கிருந்த பொருட்களை சூறையாடி  விட்டனர். இது குறித்து கஞ்சனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும்  இதுவரை நடவடிக்கை எடுக்காமல் எங்களையே போலீசார் மிரட்டி வருகின்றனர். எனவே  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertising
Advertising

Related Stories: