இடும்பாவனம் சத்குணநாத கோயிலில் பூத வாகனத்தில் சுவாமி வீதியுலா

முத்துப்பேட்டை, மே 15: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சத்குணநாத கோயிலில் இந்தாண்டு வைகாசி விசாகப்பெருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து அன்று முதல் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிலையில் நேற்று இரவு கற்பகநாதர்குளம் கிராம மக்கள் சார்பில் காலை பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, அதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு தியாகராஜா சுவாமிக்கு வசந்த மண்டப பிரவேசம் அதனை தொடர்ந்து பூத வாகனம் வீதியுலா நடந்தது. வீதியுலா கோயிலிலிருந்து புறப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தது.  இதில் சுற்றுபகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: