கிலோ ரூ.200க்கு கிடைக்கிறது ரயில்களில் தரமற்ற அல்வா விற்பனை ஜோர் பள்ளி, கல்லூரி அட்மிஷன் சீசனால் ஏடிஎம் மையங்களில் பணத்தட்டுப்பாடு

நெல்லை, மே 14:  பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணி மும்முரமாக நடந்து வருவதால் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வைத்த வேகத்தில் காலியாவதால், வாடிக்கையாளர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை களைகட்டத் துவங்கியுள்ளது. குறிப்பாக 10ல் இருந்து 11ம் வகுப்புக்கு செல்பவர்கள், பிளஸ்2 முடித்து கல்லூரிக்கு செல்பவர்கள் மற்றும் எல்கேஜி, 1ம் வகுப்பு, 6ம் வகுப்பும் புதிதாக மாணவர் சேர்க்கை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கடந்த 2 வாரமாக மும்முரமாக நடக்கிறது. சிபிஎஸ்இ ரிசல்ட் காரணமாக கல்லூரிகளில் ஒரு சில நாட்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்த முதலாண்டு மாணவர் சேர்க்கையும் மீண்டும் சுறுசுறுப்படைந்து இருக்கிறது.

குறிப்பாக இந்தாண்டு கலை அறிவியல் பாடங்களை படிக்க மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து உள்ளது. இந்த போட்டி காரணமாக கலைக்கல்லூரிகளில் கூடுதல் கட்டணத்துடன் கற்பிக்கப்படும் சுயநிதி பாடப்பிரிவு வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவுகிறது. இடம் கிடைத்த பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்காக பெற்றோரும், மாணவர்களும் பணக்கட்டுகளுடன் குவிகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக ஏடிஎம்களில் எடுக்கப்படும் பண அளவு அதிகரித்துள்ளது.

அன்றாட நுகர்வை விட அதிகளவில் வாடிக்கையாளர்கள் மூலம் ஏடிஎம்களில் பணம் எடுக்கப்படுகிறது. இதன் காரணமாக பல ஏடிஎம் மையங்களில் கடந்த சில நாட்களாக வைக்கப்படும் பணம் வைத்த வேகத்தில் பஞ்சாக பறந்து வேகமாக காலியாகிறது.  ஒரே நபர், தங்களது வெவ்வேறு ஏடிஎம் கார்டுகள் மூலம் ரூ.50 ஆயிரம் வரை எடுக்கும் நிலையும் உள்ளது. ஏடிஎம்களில் பண நுகர்வு அதிகரித்துள்ள அதேவேளை கடந்த சில நாட்களாக 2 ஆயிரம் ரூபாய்க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஏடிஎம்களில் அதிகபட்சம் ரூ.500 நோட்டுகளே கிடைக்கின்றன.

ஏடிஎம் மையங்களில் மட்டுமின்றி வங்கிகளிலும் வாடிக்கையாளர்கள் நேரடியாக கணக்கில் இருந்து பணம் எடுப்பதும், குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களுக்கு டிடி எடுப்பதும் அதிகரித்துள்ளது. எனினும் ஏடிஎம் மையங்கள் கண்காணிக்கப்பட்டு தேவைப்படும் மையங்களில் உடனுக்குடன் பணம் வைக்கப்படுவதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: