பொறுமை, கடினஉழைப்பு இருந்தால் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் சிவில் சர்வீஸ் வெற்றியாளர் பேச்சு

பட்டிவீரன்பட்டி, மே 14: திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காட்டை பூர்வீகமாக கொண்ட தீபனாவிஸ்வேஸ்வரி கடந்தாண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 117வது இடமும், தமிழக அளவில் 2ம் இடமும் பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக தகுதி பெற்றுள்ளார். இம்மாணவிக்கு பட்டிவீரன்பட்டி பிவிபி கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது. கல்லூரி தலைவர் சுப்பிரமணி தலைமை வகிக்க, தேனி கலா பாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் கலா பாண்டியன், திண்டுக்கல் இந்திய ரெட்கிராஸ் சங்க அவைத்தலைவர் நாட்டாண்மை காஜாமைதீன், துணைத்தலைவர் டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். கல்லூரி நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ்வரி வரவேற்றார்.

விழாவில் தீபனாவிஸ்வேஸ்வரி பேசியதாவது, ‘எனது தந்தை அரசு அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நான் இளவயதிலிருந்தே ஐஏஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்து வந்தது. இன்ஜினியரிங் படிப்பு முடித்தவுடன் சென்னையில் தங்கி ஐஏஎஸ் தேர்விற்காக படித்து வந்தேன். தொடர்ந்த 3 முறை தோல்வியை தழுவி 4வது முறை வெற்றி பெற்றுள்ளேன்.

இந்த கால சமூதாயத்தை சேர்ந்த இளைய தலைமுறையினர் தோல்வியை கண்டு மனம் தளரகூடாது. தொடர்ந்து தோல்வியின் மூலம் கற்றுக்கொண்ட பாடத்தை அடிப்படையாக கொண்டு இன்னும் எவ்வளவு சிறப்பாக நம்மால் செயல்பட வேண்டும் என்பதை தீர்மானித்து இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். தோற்றுவிட்டோம் என் எண்ணாமல் அதனை வெற்றியாக மாற்றும் வழிகள் பற்றி சிந்திக்க வேண்டும். வாழ்வில் இளைய தலைமுறையினர் மூன்று விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். முதலில் பொறுமை, இரண்டாவதாக கடினஉழைப்பு, மேற்கண்ட இரண்டையும் பின்பற்றினால் அதிஷ்டம் கைகொடுக்கும். நான் பணியில் சேர்ந்ததும் அரசின் நல்ல திட்டங்களின் மூலமாக மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் பணிபுரிவேன்’ என்றார்.

Related Stories: