ஓட்டுச்சாவடியை மாற்றாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்

திண்டுக்கல், மே 14: உள்ளாட்சித்தேர்தலில் ஓட்டுச்சாவடியை மாற்றினால் நாங்கள் தேர்தலை புறக்கணிப்போம் என கோரி வடமதுரை ஏவி.பட்டி மக்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். வடமதுரை அருகேயுள்ளது ஏவி.பட்டி. இவ்வூர் மக்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘எங்கள் ஊர் ஏவி.பட்டியில் பாகம் எண்: 284 வார்டு 2ல் ஓட்டுச்சாவடி உள்ளது. இதில் தொட்டையகவுண்டனுார், நள்ளி ஆசாரியூர், நரசிங்கபுரம், விகேஎஸ்.நகர், சங்கர் களம், கள்ளனுார், களத்துவீடுகள் ஆகிய பகுதிக்கு உட்பட்டு இருந்தது.

இதில் வார்டு மறுவரையறை செய்தததில் ஏவி.பட்டிக்கு மிக அருகில் உள்ள தொட்டையகவுண்டனுார், நரசிங்கபுரம், கள்ளனுர், களத்து வீடுகள் வேறு ஒரு ஓட்டுச்சாவடிக்கும், விகேஎஸ். நகர், சங்கர்களம் மற்றொரு ஓட்டுச்சாவடிக்கும் மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஒரு கிமீ. துாரம் அம்பலக்காரன்பட்டி, போஜனம்பட்டி ஆகிய ஊர்களை ஏவி. பட்டியில் இணைத்து ஓட்டுச்சாவடியை போஜனம்பட்டியில் உள்ள பள்ளிக்கூடதற்திற்கு மாற்றி அமைத்துள்ளனர்.

 எங்கள் ஊருக்கு வராமலே வார்டு மறுவரையறை அலுவலர்கள் செய்துள்ளனர். மேலும் ஓட்டுச்சாவடியை மாற்றி அமைத்ததையும் தெரிவிக்கவில்லை.

கலெக்டர் தலையிட்டு, ஏவி.பட்டியில் ஓட்டுச்சாவடி அமைக்கவும், தொட்டையகவுண்டனுார், நன்னி ஆசாரியூர், நரசிங்கபுரம், விகே.எஸ்நகர், சங்கர் களம் ஆகிய பகுதிகளை இணைத்தும் வார்டு 2 என்ற பெயரிலே அறிவிப்பு செய்து வெளியிட வேண்டும். சுதந்திரம் அடைந்தது முதல் நாங்கள் மக்களவை, சட்டசபைக்கு ஏவி.பட்டி ஓட்டுச்சாவடியில்தான் ஓட்டுளித்தோம். முன்பு இருந்ததை போல மீண்டும் ஓட்டுச்சாவடியை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டியது வரும்’ என கூறப்பட்டிருந்தது.

Related Stories: