கோட்டூர் சித்தமல்லியில் முன்னாள் எம்எல்ஏ ஏகே சுப்பையா நினைவு தினம், நினைவஞ்சலி பேரணி சிலைக்கு மாலையணிவிப்பு

மன்னார்குடி, மே 14: முன்னாள் எம்எல்ஏவும் திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினருமான மறைந்த ஏகே சுப்பையாவின்   23வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு  ஏராளமான திமுகவினர் ஊர்வலமாக வந்த மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக முன்னாள் எம்பியும் விவசாய அணியின் மாநில செயலாளருமாக இருந்து வருபவர் ஏகேஎஸ் விஜயன். இவரின் தந்தையும்   திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினருமான முன்னாள் எம்எல்ஏ  ஏகே சுப்பையாவின்  23வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

அதனையொட்டி திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் சித்தமல்லி கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு நேற்று திருத்துறைப்பூண்டி திமுக எம்எல்ஏ  ஆடலரசன், முன்னாள் எம்எல்ஏ  அசோகன் ஆகியோர் தலைமையில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஊர்வலமாக வந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள  அவரின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் எம்பியும் விவசாய அணியின் மாநில செயலாளருமான ஏகேஎஸ் விஜயன், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் எம்.செல்வராஜ்,  முன்னாள் எம்எல்ஏ அசோகன்  திமுக ஒன்றிய செயலாளர்கள் பாலஞானவேல், தேவதாஸ், சரவணன், கோவிந்தராஜன், பழனியப்பன்,  நகர செயலாளர்கள் திருத்துறைப்பூண்டி பாண்டியன், பன்னீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: