ராஜபாளையம் அருகே தேவதானம் கோயில் கொடியேற்றம்

ராஜபாளையம், மே 10: தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ராஜபாளையம் அருகே தேவதானத்தில் பாண்டி நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஆகாய ஸ்தலமாக விளங்கும் தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. செயல் அலுவலர் மகேந்திரன், கோயில் அறங்காவலர் சாந்தகுமாரி நாச்சியார் ஆகியோர் முன்னிலையில் கொடி மரத்திற்கு மேள, தாளங்கள் முழங்க பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

தவம்பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு விழா துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினமும் சுவாமி கற்பதரு, பூதவாகனத்திலும், அம்பாள் காமதேனு, சிம்ம வாகனத்திலும், அன்ன வாகனம், யானை, வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் மே 17ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

Related Stories: