அ.கலையம்புத்தூரில் சங்கர ஜெயந்தி மகா ருத்ரயாகம்

பழநி, மே 10: அ.கலையம்புத்தூரில் சங்கர ஜெயந்தியை முன்னிட்டு மகாருத்ர யாகம் நடந்தது. பழநி அருகே அ.கலையம்புத்தூரில் சங்கர ஜெயந்தியை முன்னிட்டு மகாருத்ர யாகம் மற்றும் வேதபாராயண நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், ஆலஹந்தி ஹோமம், சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், மஹன்யாசம், ருத்ர ஜபம், ருத்ர க்மார்ச்சனை, விக்னேஸ்வர பூஜை, வஸோர்தாரை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஆதிசங்கரர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: