தெருவிளக்கு சுவிட்ச் போர்டை இடமாற்றம் செய்ய கோரிக்கை

கூடலூர், மே 9: நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட நாலாவது வார்டு தேவாலா அட்டி சோழ வயல் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள தெருவிளக்கின் மெயின் சுவிட்சை இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட நாலாவது வார்டு தேவாலா அட்டி சோழ வயல் பகுதியில் உள்ளது. இங்குள்ள சாமியார் காலனி பகுதியில் தெருவிளக்குகளுக்கான மெயின் ஸ்விட்ச் போர்டு உள்ளது. மிகவும் குறைவான உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த  ஸ்விட்ச் போர்டால் அப்பகுதியில் விளையாடும் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் இதனை இடமாற்றம் செய்து பாதுகாப்பான பகுதியில் வைக்க வேண்டும் என்றும்  அப்பகுதி மக்கள் பல முறை மின்வாரியத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் இதனை பாதுகாப்பான முறையில் இடமாற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.

Related Stories: