சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ராஜராஜன் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

காரைக்குடி, மே 8 : காரைக்குடி அருகே, அமராவதிபுதூர் ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரும் வெற்றி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவர் கிளாட்சன் 93 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு முதல் தொடர்ந்து இப்பள்ளி 100 சதவீதம் பெற்று வருகிறது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories: