திண்டிவனம் நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம்

விழுப்புரம், மே. 7: திண்டிவனம் நடைபாதை வியாபாரிகள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். விழுப்புரம்  மாவட்டம் திண்டிவனம் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் ஆட்சியர்  அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திண்டிவனத்தில் மேம்பாலம்  கட்டி 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரை நிரந்தரமாக பேருந்து நிலையம்  கட்டிக்கொடுக்க வில்லை. இதனிடையே கடந்த 3 ஆண்டுகாலமாக நகராட்சிக்கு வாடகை  செலுத்தி கடைகள் நடத்திவந்த வியாபாரிகளுக்கு தகுதியான மாற்று இடம் இல்லாததால் மேம்பாலத்தின் கீழ் போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாமலும்,  ஆக்கிரமிப்பு இல்லாமலும் கடைகள் நடத்தி வந்தோம். தற்போது இதனை  அகற்றி விட்டார்கள். எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து மாற்று  இடம் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: