காரியாபட்டி அருகே நாகம்பட்டி சாலை பராமரிப்பின்றி நாசம்

காரியாபட்டி, மே 7:  காரியாபட்டி அருகே, நாகம்பட்டி கிராமத்தில் உள்ள சாலை பராமரிப்பின்றி மோசமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் போக்குவரத்திற்கு அவதிப்படுகின்றனர். மேலும், கிராமத்தில் போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர்.

காரியாபட்டி அருகே, வரலொட்டி ஊராட்சியில் நாகம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கு போதிய அடிப்படை வசதியில்லாமல் அவதிப்படுகின்றனர். குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதியில்லை. கிராமத்தில் பெரிய வாறுகால் பாலம் இடிந்து விழுந்து 5 ஆண்டாகியும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால், அவசர காலங்களில் டூவீலர்களில் செல்ல முடியவில்லை. இரவு நேரங்களில் வரும் முதியவர்கள், குழந்தைகள்  தடுமாறி விழுகின்றனர். காரியாபட்டியில் இருந்து நாகம்பட்டி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ், அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை மிகவும் மோசமாக உள்ளது.  இதேபோல, ஊருக்குள் செல்லும் சாலையும் மோசமாக உள்ளது. எனவே, நாகம்பட்டி கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும், சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: