மேற்கு நாடு சீமை மகா சபை கூட்டம்

ஊட்டி, மே. 1:  மேற்கு நாடு சீமைக்குட்பட்ட 86 ஹட்டிகளின் சிறப்பு வருடாந்திர மகா சபை கூட்டம் காத்தாடி மட்டத்தில் உள்ள ஆம்புகண்டி கூட்டணையில் நடந்தது.

 கூட்டத்திற்கு, மேற்குநாடு சீமை பார்பத்தி கிருஷ்ணாகவுடர் தலைமை வகித்தார். சின்னகணிகை போஜாகவுடர், மேற்குநாடு சீமை நலச்சங்க தலைவர் தாத்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஹட்டிகளில் (கிராமங்களில்) எவ்வித பிரிவினையும் இன்றி ஒற்றுமையாக வாழ வேண்டும். சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும். சிக்கனமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தேயிலை தோட்டங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இந்த கூட்டத்தில், மேற்குநாடு சீமை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பாலகொலா ராமன், மேற்குநாடு பள்ளி தாளாளர் பூபதி, கல்லக்கொரை நந்திகவுடர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏாரளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: