பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

மயிலம், மே 1: மயிலம் வட்டார வளமையம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. வட்டார  வளமைய மேற்பார்வையாளர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார்.  வட்டார கல்வி  அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார்.  ஒருங்கிணைப்பாளர்கள் தீப்பாஞ்சான்,  ஆசிரியர் பயிற்றுனர்கள்  விஜயலட்சுமி  ரேவதி, செந்தில்ராஜா, தர்,  தனசேகர் மற்றும்  சிறப்பு ஆசிரியர்கள்  மயிலம் பகுதியில் கடை வீதி,  வீடுகளில் தீவிர ஆய்வு நடத்தினர். குடும்ப சூழல் காரணமாக வேலை செய்யும் மாணவர்கள்,  வெளியூர்களிலிருந்து வந்தவர்கள், பாதியில் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு  வேலை செய்யும் மாணவர்களையும் இந்த குழுவினர் கண்டறிந்து அரசு பள்ளிகளில்  சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.  மேலும் நரிக்குறவர் காலனி, பழங்குடியின குடியிருப்பு ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தனர்.

Related Stories: