ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு புளியரை ராஜாவுடன் கே.என்.நேரு அனிதா ராதாகிருஷ்ணன் சந்திப்பு

நெல்லை, ஏப். 26:  ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கேட்டு புளியரை ராஜாவுடன் முன்னாள் அமைச்சர், கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் சந்தித்து பேசினர்.தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத் தலைவர் புளியரை ராஜாவை நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சந்தித்துப் பேசினர். அப்போது ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் திமுகவிற்கு சைவ வேளாளர் சங்கம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அப்போது சங்கத்தின் மண்டல செயலாளர் கணபதியப்பன், திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சுப்பிரமணியன் உடனிருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: