திருத்துறைப்பூண்டியில் பரிதாபம் வீட்டு காம்பவுண்ட் சுவரில் டூவீலர் மோதி வாலிபர் பலி

திருத்துறைப்பூண்டி, ஏப். 26: திருத்துறைப்பூண்டி நகர பகுதியான பொன்னையன் செட்டி தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது மகன் பாரதி(எ) அரவிந்தன் (20) டிப்ளமோ படித்துள்ளார். இவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் கடைத்தெருவிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருத்துறைப்பூண்டி நாகை சாலை பவுண்டடி தெரு வளைவில் உள்ள ஒரு மாடி வீட்டின் காம்பவுண்ட் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அரவிந்தன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் பொதுமக்கள் கூடியதால் திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு தெற்கு வீதி வழியாக வாகணங்கள் திருப்பி விடப்பட்டன.

Related Stories: