×

இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதி விளையாட்டு சாதனம் சேதம் பரமக்குடி சித்திரை திருவிழாவில் புஷ்பப் பல்லாக்கில் கள்ளழகர் பவனி

பரமக்குடி, ஏப்.24: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள்கோயில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் காலை,மாலை சிறப்பு அபிஷேகங்களுடன் ஆராதனைகளும் நடந்தது. இதைத் தொடர்ந்து 18ம் தேதி வைகை ஆற்றில் மஞ்சள் பட்டு உடுத்தி கள்ளழகர் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் மேச்சத்திரத்தில் உள்ள தல்லாக்குளம் என்ற இடத்தில் எதிர்சேவையும், பின்னர், மஞ்சன்பட்டினம், காட்டுபரமக்குடி, ஒட்டபாலம் உள்ளிட்ட பல்வேறு மண்டகபடிகளில் பக்தர்களுக்கு குதிரை வாகனத்தில் காட்சி அளித்தார். இரவு வண்டியூர் என்னும் காக்காதேப்பு சேலையில் சந்தனகாப்பு அணிந்து காட்சியளித்து, இரவு மண்டூக முனிவருக்கு சபா விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சியில் தசாவராதம் நடைபெற்றது. இதில், பொருமாள் அர்ச்ச, மச்ச, கூர்ம, வாமன, பரசுராம, பலராமா அவதராம், ராம அவதராம், மோகினி அவதாரம் ஆகிய அவதாரங்களில் விடிய விடிய பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று புஷ்பப் பல்லாக்கில் கள்ளழகர் திருக்கோலம் கொண்டு சன்னதிக்கு எழுந்தருளினார். இரவு கண்ணாடி சேவை நடைபெற்றது.

Tags : festival ,Pushpap Palakkal ,Paramakadai ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...