ஈஸ்டர் பண்டிகையையோட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஊட்டி, ஏப்.22: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஊட்டியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.

கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையாக ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. ஈஸ்டருக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கிறிஸ்தவ மக்களால் கடைபிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி குருத்தோலை பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து இயேசு உயிர்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நேற்று நள்ளிரவு ஈஸ்டர் தின பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். ஊட்டி மேரிஸ் ஹில் பகுதியில் உள்ள புனித மரியன்னை ஆலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. காந்தல் குருசடி ஆலயத்தில் பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து எல்க்ஹில் புனித ஜுட்ஸ் ஆலயம், கேத்தி இஎஸ்ஐஆர்., ஆலயம், ஊட்டி சிஎஸ்ஐ., வெஸ்லி ஆலயம் உட்பட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் பிரார்த்தனை நடந்தது. ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு பிங்கர் போஸ்ட் புனித தேரேசோ அன்னை ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்ட கெபி மற்றும் ேமடை ஆகியவை திறக்கப்பட்டது. மேலும் இதே போல் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் தின சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.

Related Stories: