வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம், ஏப். 21:  விழுப்புரம் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆட்சியர் சுப்ரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழகத்தில் கடந்த 18ம் தேதி 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட விழுப்புரம், திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.இங்கு 24 மணி நேரமும் துணை ராணுவத்தினர், துப்பாக்கி ஏந்திய போலீசார், மாவட்ட காவல்துறையினர் என மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர், வேட்பாளர்களின் முகவர்கள், காவல்துறையினர் என மூன்று பேரும் கண்காணிக்க ஏதுவாக மூன்று அறைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியை ஆட்சியர் சுப்ரமணியன் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

Advertising
Advertising

Related Stories: