வாக்குப்பதிவு சதவீதம் வெகுவாக குறைந்தது

விழுப்புரம், ஏப். 19:  விழுப்புரம் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக 38 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் நடந்தது. ஒவ்வொரு தேர்தலின்போதும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம், அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்
Advertising
Advertising

களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் மக்களவை தொகுதியில் கடந்த இரண்டு தேர்தலைவிட இந்த தேர்தலில் வாக்கு பதிவு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. நேற்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. பிற்பகல் 1 மணிக்கே 50 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதனால் மாலையில் 80 சதவீதத்தை தொடும் என கருதப்பட்டது. ஆனால் பிற்பகலுக்கு பின்னர் வாக்குப்பதிவு மந்தமாக நடந்தது.ஒரு மணிக்குப்பிறகு வெறும் 20 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன. விழுப்புரம் மக்களவை தொகுதியில் கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் 74.58 சதவீத வாக்குகள் பதிவானது. 2014ம் மக்களவைத் தேர்தலில் 76.84 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த தேர்தலைவிட 2.26 சதவீதம் அதிகமாகும். இந்த தேர்தலில் கடந்த இரு தேர்தலை விட உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 64.53 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. மாலை 6 மணி இறுதி நிலவரப்படி---சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த இரண்டு மக்களவைத் தேர்தலைவிட வாக்குப்பதிவு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது.

Related Stories: