₹2 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

திருக்கோவிலூர், ஏப். 19:  மக்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. இதையொட்டி திருக்கோவிலூர் டிஎஸ்பி மகேஷ் உத்தரவின் பேரில் போலீசார் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ஏரிக்கரை மூலை பகுதியில் மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக திருக்கோவிலூர் சந்தப்பேட்டையை சேர்ந்த கபூர்(55) என்பவரிடம் இருந்து 600 குவார்ட்டர் மதுபாட்டில்களையும், 5 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் சோழவாண்டிபுரத்தை சேர்ந்த காமராஜ்(53), திம்மச்சூர் கிராமத்தை சேர்ந்த பாலு(40), ராஜா(40), நெடுமுடையான் கிராமத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன்(52) அம்மன்கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்(55) ஆகியோரிடம் தலா 15 குவார்ட்டர் மதுபாட்டில்களையும், தலா 5 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.மணலூர்பேட்டை காவல்நிலைய சரகம் பிள்ளையார்பாளையம் கிராமத்தை சேர்ந்த சண்முகம்(49) என்பவரிடம் இருந்து 2 லிட்டர் சாராயத்தையும், 11 குவார்ட்டர் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். கண்டாச்சிபுரம் காவல்நிலைய சரகம் நல்லாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணி மனைவி முனியம்மாள்(61), கடையம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்(65), காரணை கிராமத்தை சேர்ந்த முருகன்(38), சிவக்குமார்(42) ஆகியோரிடம் இருந்து தலா 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட கபூர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிந்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேமாளூர் கிராமத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்ததாக காட்டுச்செல்லூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(44) என்பவர் மீது வழக்கு பதிந்து அவரிடமிருந்து 160 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் அரகண்டநல்லூர் காவல்நிலைய சரகம் வீரப்பாண்டி கிராமத்தை சேர்ந்த ஜார்ஜ் மனைவி கனகா(60) என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 240 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  அருணாபுரம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை(56) என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மொத்த மதிப்பு ரூ.2 லட்சம். இதுகுறித்து கனகா, ஏழுமலை ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: