சித்திரை திருவிழா

காரைக்குடி, ஏப். 19: காரைக்குடி அருகே பாரிநகர் நலச்சங்கம் சார்பில் சித்திரை திருவிழா கொண்டாப்பட்டது. செயலாளர் சேதுராமன் வரவேற்றார். தலைவர் நவசக்தி தலைமை வகித்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். பொருளாளர் சதீஸ்குமார் முன்னிலை வகித்தார். பேராசிரியர் அய்க்கண், தமிழிசைச்சங்க பொருளாளர் மகரிஷி சேதுராமன், செயலாளர் சுந்தரராமன், முன்னாள் நிர்வாகிகள் பொன்துரை, பி.வி.சுவாமி, நாராயணன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. துணைத்தலைவர் இளங்கோவன் நன்றி கூறினார்.

Related Stories: