ெபாள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு

உடுமலை, ஏப். 17:   பொள்ளாச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரன், நேற்று இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று காலை உடுமலை கொழுமம் சாலை பிரிவில் இருந்து அதிமுக.,வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி நடந்தது.  இதில் வேட்பாளர் மகேந்திரன், அமைச்சர் ராதாகிருஷ்ணன், பாஜக.,வை சேர்ந்த ஜோதீஸ்வரி கந்தசாமி உள்பட கூட்டணி கட்சியினர் 800 பேர் பிரசாரத்தில் பங்கேற்றனர்.ஊர்வலம் பழனி சாலை, ராஜேந்திரா சாலை, கமிஷனர் சுப்பையா வீதி, தளி சாலை, பைபாஸ் சாலை, பேருந்து நிலையம் அடைந்தது. பின்னர் தேவனூர்புதூர் வழியாக ஆனைமலை சென்றனர். மாலை பொள்ளாச்சி சி.மகேந்திரன் பிரசாரத்தை நிறைவு செய்தார். உடுமலையில் இருசக்கர வாகன பேரணியின் போது, சாலைகள் அகலப்படுத்தியது, பேவர்பிளாக் கற்களுடன் நடைபாதை அமைத்தது, மேம்பாலம் கட்டியது, பல கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றியது குறித்து மகேந்திரன் பட்டியலிட்டார். மேலும் உடுமலையில் ரவுண்டானா அமைக்கப்பட உள்ளதாகவும், கேந்திரிய வித்யாலயா பள்ளி வரஉள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: