கிருஷ்ணகிரியில் சுட்டெரிக்கும் வெயில் தர்பூசணி, நுங்கு, இளநீர் விற்பனை ஜோர்

கிருஷ்ணகிரி,ஏப்.16: கிருஷ்ணகிரியில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் தர்பூசணி, நுங்கு, இளநீர் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரியில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த மாதம் வெயில் 104 டிகிரியை தாண்டி அடித்தது. இந்த மாதமும் தொடங்கிய நாள் முதல் இன்று வரையில் வெயில் சுட்டெரித்து தினமும் 100 டிகிரியை தாண்டி வெயில் அடிப்பதால் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.வெயில் காரணமாக தர்பூசணி பழங்கள், நுங்கு, இளநீர், பதனீர் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

நுங்கு 2 ₹10க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல தர்பூசணி பழம் ஒரு பிளேட்  ₹10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இளநீர் ₹20 முதல் 25 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலை, சென்னை சாலை, வெஸ்ட் லிங்க் ரோடு, கோ-ஆப்ரேட்டிவ் காலனி போன்ற இடங்களில் இளநீர், நுங்கு, தர்பூசணி விற்பனை ஜோராக நடக்கிறது. சூட்டை தணிப்பதற்காக பொதுமக்கள் இளநீர், நுங்கு அதிக அளவில் சாப்பிட்டு வருகிறார்கள்.

Related Stories: