அரை நிர்வாணத்துடன் ரயில் பெட்டியில் எம்எல்ஏ உலா: பயணிகள் அதிர்ச்சி

புதுடெல்லி: தேஜஸ் ராஜ்தானி ரயிலில் பீகார் எம்எல்ஏ ஒருவர் அரை நிர்வாணத்துடன் உலா வந்த புகைப்படம், தற்போது சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம் பாகால்பூர் அடுத்த கோபால்பூரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ நரேந்திர குமார் நீரஜ் என்கிற கோபால் மண்டல், நேற்றிரவு  பாட்னா-டெல்லி தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸின் ஏ -1 கோச்சில் பயணம் செய்தார். அப்போது அவர், தனது பேண்டை கழற்றி போட்டுவிட்டு, வெறும் பனியன் மற்றும் டவுசருடன் ரயில் பெட்டிக்குள் உலா வந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள், டிடிஆர் மற்றும் ஆர்பிஎப் போலீசிடம் புகார் அளித்தனர். அதையடுத்து, எம்எல்ஏவை அவரது இருக்கைக்கு செல்லச் சொல்லி, ஆடைகளை அணியும்படி அறிவுறுத்தினர். இதுதொடர்பான அரை நிர்வாண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், எம்எல்ஏ நரேந்திர குமார் நீரஜ், செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘ரயில் பயணத்தின் போது எனது வயிறு கலங்கியதால், நான் எனது உள்ளாடைகளை மட்டுமே அணிந்திருந்தேன். மற்றபடி, எவ்வித ஆபாசமான செயல்களிலும் ஈடுபடவில்லை’ என்று கூறினார்….

The post அரை நிர்வாணத்துடன் ரயில் பெட்டியில் எம்எல்ஏ உலா: பயணிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: