பட்டாபிராமில் பரபரப்பு பறக்கும் படை அதிகாரியை பணி செய்ய விடாமல் தகராறு

ஆவடி, ஏப்.11: ஆவடி அருகே பட்டாபிராமில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்த கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.     ஆவடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியாக சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகள் படி. இவர் தினமும் அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணத்தை காரில் எடுத்து செல்லுகிறார்களா என வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவகுமார் தலைமையில் தேர்தல் பறக்கும்படை ஆவடி அடுத்த பட்டாபிராம் இந்துக் கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.     

காரில் இருந்த டிரைவர்,  சிவகுமாரை அவதூறாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து உள்ளார். மேலும், அவர் சோதனை செய்யும்போது காரை எடுத்து கொண்டு வேகமாக புறப்பட்டு சென்று விட்டார். உடனே சிவகுமார், காரின் பதிவெண்ணை குறித்துகொண்டு பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இதனை அடுத்து, இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பறக்கும் படை அதிகாரி சிவகுமாரை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, அவதூறாக பேசிய கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Related Stories: