100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி

கள்ளக்குறிச்சி, ஏப். 10:     வரும் 18ம் தேதி நடைபெற உள்ள கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தியாகதுருகத்தில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. கள்ளக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் அனுசுயா தேவி தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி உதவி தேர்தல் அலுவலர் காந்த் முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் தயாளன் வரவேற்றார். மினி மாரத்தான் போட்டி, தியாகதுருகம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் இருந்து நகரின் முக்கிய தெரு வழியாக பஸ் நிலையம் வரை சென்று சேலம் மெயின்ரோடு வழியாக மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தென்னக ரயில்வே துறை நிலம் எடுப்பு தனி வட்டாட்சியர் சையத்காதர், தியாகதுருகம் வட்டார மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு, மண்டல துணை

வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர்கள் குப்புசாமி, சிராஜீதின், முனியப்பன் மற்றும் டிஎல்எம் மருத்துவமனை ஐடிஐ மாணவர்கள், தனமூர்த்தி ஐடிஐ மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: