தேமுதிக வேட்பாளர் சுதீஷ் சங்கராபுரத்தில் வாக்கு சேகரிப்பு

சங்கராபுரம், மார்ச் 27: கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் சுதீஷ் சங்கராபுரத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வாக்குகளை சேகரித்தார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் வேட்பு மனுதாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து வேட்பாளர் சுதீஷ் நேற்று சங்கராபுரத்தில் உள்ள அதிமுக, பாமக, தேமுதிக மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார். அப்போது தேமுதிக நகர செயலாளர் ஜம்சித், அதிமுக நகர செயலாளர் நாராயணன், குசேலன், ராஜமாணிக்கம், சுமதி சின்னசாமி, கோவிந்தசாமி, முருகன், செல்வம் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: