ஓசூர் அருகே வீர ஆஞ்சநேயர் கோயில் விழா

ஓசூர், மார்ச் 26:  ஓசூர் அருகே 300 ஆண்டு பழமை வாய்ந்த கவிகுட்டை வீரஆஞ்சநேயர் சுவாமி கோயில் விழா நடந்தது.

ஓசூர் அருகே திருச்சிப்பள்ளி அம்பிலெட்டி பகுதியில் கவிகுட்டை உள்ள வீர ஆஞ்சநேயர் கோயில் தேர் திருவிழா நடந்தது. பால்கம்பம், பிரதிஷ்டை, சுவாமிக்கு அபிஷேகம், ஈஸ்வர சுவாமிக்கு அபிஷேகம், ரேவண சித்தேஷ்வர சுவாமிக்கு அபிஷேகம், சுவாமி உற்சவம், கங்கா பூசை, அங்குரார்பணம், அன்னதானம், பஜனை, நாக பூஜை, கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, கருடஸ்தம்ப பூஜை, புஷ்ப அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் திருச்சிப்பள்ளி, அம்பிலெட்டி, ராஜாப்புரம், தொரப்பள்ளி, சானமாவு, ஒன்னல்வாடி, சென்னத்தூர், திப்பாளம் உள்ளிட்ட கிராம மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.

நேற்று நடைபெற்ற தேர்திருவிழாவில், முன்னாள் எம்எல்ஏ மனோகரன், சென்னேகவுடு, மஞ்சுளா ரங்கநாத், முன்னாள் தலைவர் நஞ்சப்பா, கிருஷ்ணப்பா, பாஜ மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில், தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அணியினர் பங்கேற்று விளையாடினர்.

 

Related Stories: