×

உப்புநீரை குடிநீராக்கும் பிளாண்ட் அமைக்க கோரிக்கை

சாயல்குடி, மார்ச் 22: முதுகுளத்தூர் அருகே சாம்பக்குளம் காலணியில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து உப்புத்தண்ணீரை நன்னீராக்கும் பிளான்ட் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்து£ர் ஒன்றியம், சாம்பக்குளம் ஊராட்சியில் இந்நிராநகர் காலனி, அண்ணாநகர் காலனியில் சுமார் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக குடிநீர் விநியோகம் இன்றி கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே புதிய ஆழ்துளை கிணறு அமைத்து உப்புத்தண்ணீரை நன்னீராக்கும் பிளான்ட் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். காலனி மக்கள் கூறும்போது, ‘கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இப்பகுதிக்கு தண்ணீர் வருவது கிடையாது. இதனால் பக்கத்து கிராமமான உடைகுளம் சாலையோரம் செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் கசிவு நீர் தொட்டியிலிருந்து அள்ளி, தள்ளுவண்டிகளில் தண்ணீர் எடுத்து வருகிறோம். தற்போது சாம்பக்குளம் பஞ்சாயத்தில், ரூ.10 லட்சம் மதிப்பில் உப்புத்தண்ணீரை நன்னீராக்கும் பிளான்ட் அமைக்க மாவட்ட நிர்வாகம், நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இதனை தண்ணீர் வசதியுள்ள பொலிகால், பெருங்கரணை பகுதியில் அமைக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்திராநகர் காலனி, அண்ணாநகர் காலனியில் எவ்வித தண்ணீர் வசதியும் கிடையாது. ஆழ்துளை கிணறு அமைத்தால் உப்பு தண்ணீர் கிடைக்கும். எனவே உப்புத் தண்ணீரை பயன்படுத்தும் விதமாக உப்புதண்ணீரை நன்னீராக்கும் திட்ட பிளாண்ட் இப்பகுதியில் அமைத்துத் தர வேண்டும். பெருங்கரணையிலிருந்து தனியாக குழாய் அமைத்து காலனி பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை