தேர்தல் பணிகள் குறித்து செலவின பார்வையாளர் ஆய்வு

சேலம், மார்ச் 22: சேலம் நாடாளுமன்ற தேர்தலில் ஓமலூர், இடைப்பாடி மற்றும் சேலம் மேற்கு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்ட தேவ் பிரகாஷ் பமனாவத், நேற்று முன்தினம் சேலத்திற்கு வந்தார். சேலம் சாரதா கல்லூரி சாலை கூடுதல் சுற்றுலா மாளிகையில் உள்ள அறை எண்4ல் முகாம் அலுவலகம் உள்ளது. தேர்தல் செலவின பார்வையாளர் தேவ் பிரகாஷ் பமனாவத் கைப்பேசி எண் 93852-86044 மற்றும் முகாம் அலுவலக தொலைபேசி எண் 0427-2311252 ஆகும். தேர்தல் செலவினங்கள் தொடர்பான புகார்களை தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், செலவின கணக்கு குழு அலுவலர்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்களின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் செலவின பார்வையாளர் தேவ் பிரகாஷ் பமனாவத் தலைமை வகித்தார். கலெக்டர் ரோகிணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தேர்தல் விதிமீறல்களை தடுக்கும் வகையில் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், உதவி கலெக்டர்(பயிற்சி) வந்தனா கார்க், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊடக கண்காணிப்பு மையத்தையும், தேர்தல் கட்டுபாட்டு அறையையும் தேர்தல் செலவின பார்வையாளர் தேவ் பிரகாஷ் பமனாவத் பார்வையிட்டார்.

Related Stories: