×

ஆர்.எஸ்.மங்கலம் மக்கள் வேண்டுகோள் ஆப்பனூர் மாட்டுவண்டி பந்தயம் தூத்துக்குடி முதலிடம்

சாயல்குடி, மார்ச் 21: கடலாடி அருகே ஆப்பனூரில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தூத்துக்குடி அணி முதலிடம் பிடித்தது. ஆப்பனூர் அரியநாயகி அம்மன் வருடாந்திர மாசா திருவிழாவை முன்னிட்டு கிராமம் சார்பில், இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இருபிரிவுகளாக நடந்த போட்டில் பெரியமாட்டில் 12 வண்டிகளும், சிறியமாட்டில் 15 வண்டிகளும் கலந்து கொண்டது. ஆப்பனூர் முதல் இளஞ்செம்பூர் விலக்குரோடு வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் வண்டிகள் சென்று திரும்பியது.

இதில் பெரியமாடு பந்தயத்தில் முதலிடத்தை தூத்துக்குடி மாவட்டம், கம்பத்துப்பட்டி வீரஅன்னராசு மாடுகளும், இரண்டாம் இடத்தை திருநெல்வேலி மாவட்டம், நான்காம்தளம் துரைப்பாண்டியன் மாடுகளும், மூன்றாம் இடத்தை ராமநாதபுரம் மாவட்டம், எம்.கரிசல்குளம் பாண்டித்தேவர் மாடுகளும் பெற்றது. சிறிய மாடு பந்தயத்தில் தூத்துக்குடி மாவட்டம், வேளாங்குளம் கண்ணன் மாடுகள் முதலிடத்தையும், தூத்துக்குடி மாவட்டம், கம்பத்துப்பட்டி பால்பாண்டி மாடுகள் இரண்டாம் இடத்தையும், சாயல்குடி அலியார் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றது, மாடுகளின் உரிமையாளர்களுக்கும், வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்க பணமும், குத்துவிளக்கு, வெங்கல பாத்திரங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது. இப்போட்டியை மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாட்டுவண்டி பந்தய ஆர்வலர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

Tags : Thoothukudi ,cattle race ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...