×

கூட்டணி கட்சியினரிடம் திமுக வேட்பாளர் சந்திப்பு

பரமக்குடி, மார்ச் 21:பரமக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சம்பத்குமார், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் தங்கவேலன், முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், மாவட்ட துணைச் செயலாளர் அகமது தம்பி, இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. திசைவீரன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆசிபெற்றார். பின்னர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், மதிமுக மாவட்ட செயலாளர் குணா, விடுதலை சிறுத்தைகள் கிழக்கு மாவட்ட செயலாளர் வேந்தை சிவா, கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளை சந்திந்து ஆதரவு திரட்டினார். இதற்கிடையே சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் சங்க பொதுச்செயலாளர் ஹாரிஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக கூட்டணணிக்கு ஆதரவு கொடுப்பதும் என்றும் தமிழகம் எங்கும் தேர்தல் பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது.

Tags : candidate ,DMK ,coalition partner ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்