பாலக்கோடு சுற்றுவட்டாரத்தில் முள்ளங்கி அறுவடை பணி தீவிரம்

பாலக்கோடு, மார்ச் 21: பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட முள்ளங்கி அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல், விவசாயிகள் முள்ளங்கியை பயிரிட்டுள்ளனர். தற்போது, முள்ளங்கி நன்கு வளர்ந்து தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது வரத்து அதிகரிப்பால் ஓசூர், ராயக்கோட்டை உள்ளிட்ட காய்கறி சந்தைகளில் முள்ளங்கி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ₹3 முதல் ₹4 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை அடைகின்றனர். மேலும் தண்ணீரின்றி பாலக்கோடு முழுவதும் வறட்சி நிலவுகிறது. மேலும், பயிரிட்டு உரிய விலை இன்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Related Stories: